சூர்யாவின் ஜெய்பீம் பார்த்து கண்கள் குளமாகிவிட்டதாக உலக நாயகன் கமல் ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியிருக்கிறது. தலைப்பை பார்த்தாலே தெரியுதே, என்னத்த போய் என்று நினைத்து படம் பார்த்தவர்கள் ஆடிப் போய்விட்டனர்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை இவ்வளவு கஷ்டமா என்று வியக்காதவர்களே இல்லை. படத்தை பார்த்தவர்களின் இதயங்கள் கனத்துவிட்டது.
இந்நிலையில் கமல் ஹாசனும் ஜெய்பீம் படம் பார்த்திருக்கிறார். படம் குறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது,
#JaiBhim பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது!
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!! 🙏🏽 https://t.co/JfYu0o2t6S— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2021
கமலின் ட்வீட்டை பார்த்த சூர்யா கூறியிருப்பதாவது,
நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது!
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!! என்றார்.
Credits: tamil.samayam.com



