தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.
பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைகிறார்கள்.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.
விரைவில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகர் விஜய் ஏற்கனவே துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி நெல்சன் திலிப்குமார் கடைசியாக இயக்கிய, டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயனும் ராணுவ மருத்துவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Credits: cineulagam.com